கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையொட்டி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயயலாளரும், ஆன்னாள் அமைச்சருமான செந்ஙதில் பாலாஜி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கு மருத்துவ சிகிச்சை தொடங்கியது. ஏராளமான மக்கள் வந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். நல்வாழ்வு மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கும், இதற்கு ஏற்பாடு செய்த செந்தில் பாலாஜிக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமைதாங்கினார். பின்னர் செந்தில் பாலாஜி, கலெக்டர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ,துணை மேயர் தாரணி சரவணன் ,மாநகராட்சி ஆணையர் கவிதா,மாநகராட்சி அதிகாரிகள் ,மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.