கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
வழக்கு தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் சாட்சியங்கள் பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், 4 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ கூடுதல் SP முகேஷ் குமார் அளித்திருந்த சம்மன் அடிப்படையில், 4 பேர் தற்போது ஆஜராகி இருக்கின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அறிந்திருந்தால், சாட்சியங்கள் பெரும் நோக்கத்திற்காக சம்மன் மூலமாக நேரில் ஆஜராகும்படி இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள சுற்றுலா மாளிகைக்கு பொதுமக்கள், போட்டோகிராபர், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் என எஸ்.ஐ.டி தரப்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆஜராகி உள்ளனர்.

