Skip to content

கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது….
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்ட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்க்பபட்டது. காவல்துணை க்ணகாணிப்பாளர், 2, ஆய்வாளர்கள, 8 உதவி ஆய்வாளரக்ள் உட்பட பாதுகாப்பு பணியில் இருந்த 517 காவலர்கள். கரூரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் என 600 பேர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.

கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டனர். வேலுச்சாமிபுரத்தில் 11 நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்டத்தில் குடிநீர் , உணவு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயம். கூட்ட நெரிசலின் போது அவர்களை காப்பாற்றதான் ஆம்புலன்ஸ் வந்தது. கரூர் சம்பவத்தின் போது அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டது. அதிக கூட்டம் வரும் என்று அதிக பாதுகாப்பு போடபட்டது. கூட்டத்தில் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தகர கொட்டகையை அகற்றி வெளியேற முயன்றனர். கூடடம் உள்ளே நுழைந்ததால் மின்சாரம் தாக்குவதை தடுக்க ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு சட்டப்படி கையாண்டது. தவெக தலைவர் கரூருக்கு வர 7 மணி நேரம் தாமதம். பிரசார வாகனத்திற்கு பின்னர் அதிகம் பேர் வந்தனர். இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கபட்டுள்ளன.கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள் தான். கூட்டம் நடத்தும் கட்சிகள் பொறுப்போடு செயல்பட வேண்டும். இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!