கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் இன்று மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் லைட் ஹவுஸ் கார்னர், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உடன் ஆய்வு செய்தார். தவெக முதலில் கேட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
