கரூர் அருகே தரகம்பட்டியில் உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு 1330 திருக்குறளை பதாகைகளாக ஏந்தி மாண, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கரூர் மாவட்டம், தரங்கம்பட்டியில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகள் இன்று உலக தாய்மொழி தினத்தினை

முன்னிட்டு உலக சாதனைக்காக ஆல் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் இடம் பெறுவதற்காக 1330 திருக்குறள்களை பதாகைகளாக ஏந்தி குறள் முழக்கம் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியை பள்ளி தாளாளர், கரூர் திருக்குறள் பேரவை தலைவர் மேலை பழனியப்பன், ஆல் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சந்திரசேகரன் ஆகியோர் புறாவினை பறக்கவிட்டு பேரணியை துவக்கி வைத்தனர்.
தரகம்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் அருகே துவங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது.
பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 1500 க்கும்

மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் 1330 திருக்குறள்களை கையில் பதாகைகளாக ஏந்தியவாறு குரல் முழக்கமிட்டவாறு பேரணியாகச் சென்றனர்.
முன்னதாக உலக தாய் மொழி தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே 1330 குறள்கள் ஒப்புவிக்கும் போட்டியும் நடைபெற்றது.

