கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதி வழியாக வையம்பட்டிக்கு செல்லும் காவேரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் இருந்த வீடுற்குள் புகுந்தது அரை மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வெளியே சென்றது.
அதனைப் பார்த்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தண்ணீரை நிறுத்தினர்.
அருகில் இருந்த வீட்டிற்குள் சேருடன் தண்ணீர் தேங்கியதால் அதனை வெளியேற்றும் பணியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டார்.
குறிப்பாக காவேரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலை சேதமடைந்து மிகப்பெரிய குழி உருவாகியது அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.