கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாம் கால யாக பூஜையில் பங்கேற்றும் – அன்னதானம் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்

பட்டு, காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தால் யாக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவில் வளாக முன்பாக வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி பக்தர்களை கவரும் வகையில் நடைபெற்றது.
மேலும் இன்று இரவு 7 மணி முதல் நாளை மதியம் 1 மணி வரை இடைவிடாது நடைபெறும் அறுசுவை அன்னதான நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
நாளை காலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக கரூர் வட்டார பகுதிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இலவச பேருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். சுமார் நாளை 50,000 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

