ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி, காதோலை கருகமணி, பழங்கள் ஆகியவற்றை பூஜை செய்து படைத்து காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் 26,774 கன அடிக்கு நீர்வரத்து உள்ளதால், மாயனூர் காவேரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், ஆற்றில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் காவேரி வாய்க்கால் ஓரங்களில் பொதுமக்கள் அனைவரும் வாழையிலை வைத்து புத்தரிசி படைத்து புதுமண தம்பதியினார்கள் திருமாங்கல்யம் மாற்றியும் முளைப்பாறையை காவிரி ஆற்றில் விட்டும் காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.
தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.