கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவர் விவசாயி. இவர் நேற்று காலையில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகே உள்ள உப்புபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சிவபாலன் (35) பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வீராச்சாமி தென்னிலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் சிவபாலனின் தாயார் கமலம் எனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தென்னிலை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். தகலலையடுத்து அரவக்குறிச்சி டி எஸ் பி முத்தமிழ்செல்வன், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தென்னிலை சப் இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவபாலன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது, இதையடுத்து வீட்டின் அருகே உள்ள தனது தாய் மாமன் தனபாலிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தனபால் சிவபாலனை கண்டித்துள்ளார். அப்போது சிவபாலன் அருகில் இருந்த அருவாளை எடுத்து தனபால் மீது வெட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தனபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவல் தனபாலின் மகன்கள் கார்த்திகேயன் (27), பூவரசன் என்கிற புவனேஷ் (24), ஆகியோருக்கு தெரிவித்தனர் தகவல் தெரிந்த தனபாலின் மகன்கள் ஆவேசத்துடன் உப்பு பாளையத்திற்கு வந்து சிவபாலனை தேடினர். அப்போது வீராசாமி தோட்டத்திற்கு அருகே போதையில் நின்றுள்ளார். இருவரும் சேர்ந்து அருகில் இருந்த அருவாளை எடுத்து சிவபாலனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்ததை பார்த்து கார்த்திகேயன், புவனேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் தென்னிலை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தை தாக்கப்பட்டதற்கு மகன்கள் அறிவாளில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.