Skip to content

நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

  • by Authour

நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் காரில் வந்து செயின் திருட்டில் ஈடுபட்ட நபரை கரூரில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் கரூர் போக்குவரத்து போலீசார் இன்று வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக அதிவேகமாக வந்த கார் ஒன்றை மறித்துள்ளனர். அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்று கொண்டுள்ளது. கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலியூர் காளிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த அந்த காரை போக்குவரத்து காவல்துறையினர் விரட்டி மடைக்கி பிடித்தனர். அப்போது விசாரித்ததில் போதையில் அதிவேகமாக வந்ததாக காரில் வந்தவர் முன்னுக்கு பின் முறனாக தகவல்

தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரை கைது செய்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 37) என்பவர் எனும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே வளையப்பட்டி பகுதியில் செயின் திருட்டில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பித்து வாங்கல் வழியாக கரூர் வந்து திருச்சி சென்று கொண்டிருந்த நிலையில் காவலர்களிடம் மாட்டி கொண்டதாக தெரிகிறது. பின்னர் மோகனூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காரில் சென்று செயின் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி வெங்கட்ராமனின் தாய் சிறை காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!