தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான மாயனூர், குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.