Skip to content

கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு.

வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து இரண்டாம் நாள் சாமி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்திலிருந்து மேள தாளங்கள்

முழங்க வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.

ஆலய உள்பிரகாரம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெற்ற நிலையில் ஆண்டாள் சந்நிதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து ஆலயம் மண்டபம் வந்தடைந்த ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு பகல் பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.

error: Content is protected !!