Skip to content

கரூரில் தனிநபர் ஸ்கேட்டிங்… மாரத்தானில் சாதனை புரிந்த சிறுவன்-சிறுமிக்கு சான்றிதழ்…

கரூரில் இந்துஸ்தான் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ், செண்பகபிரியா தம்பதியரின் மகன் அஷ்வின் கார்த்திக் (11), தனிநபர் ஸ்கேட்டிங் மாரத்தான் மூலம் (Solo full skating marathon மண்மங்கலம் துவங்கி கீரம்பூர் சென்று திரும்பி வந்து மண்மங்கலம் வரை 94.21 நிமிடத்தில் 42.5 கிலோமீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தார்.

இதையடுத்து கரூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் – மோகனவல்லி தம்பதியரின் மகள்
நவிக்க்ஷா (8), கோதூர் பகுதியில்

அமைந்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் சிலம்பம் சுற்றிக்கொண்டே தனிநபர் ஸ்கேட்டிங் (Fastest solo skating with silambam) தொடர்ந்து 30 நிமிடங்கள் செய்து சாதனை புரிந்தார்.

இந்துஸ்தான் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் தீர்ப்பாளர் Cheif Adjudicator – முருகானந்தம் இருவரது சாதனையையும் நேரில் கண்காணித்து உறுதி செய்தார். சாதனை புரிந்த இருவருக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!