கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் மற்றும் கரூர் மாவட்ட ஊர்காவல்படையினர் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். அவருடன் ஊர்காவல்படை தளபதி நீலாவதி உள்ளிட்ட ஆயுதப்படை, ஊர்காவல்
படையினர் இரத்த தானம் வழங்கி வருகின்றனர். இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்களை மருத்துவ கல்லூரி முதல்வர் வழங்கினார்