தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற வருகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று இரண்டாம் நாள் கருட வாகன சேவையில் காட்சியளித்தார். ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு பின்னர் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…
- by Authour
