Skip to content

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

கரூரில் பிரிசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழா நேற்று 14-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19ம் தேதி பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 49 இடங்களில் இருந்து ரதங்கள் வர உள்ளன. பூத்தட்டு ஊர்வலத்தையொட்டி விழா கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் மதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பூத்தட்டு ஊர்வலத்தில் தாந்தோணிமலை, வெங்கமேடு, வையாபுரி நகர், பசுபதிபாளையம், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலம்

நடைெபறும். இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்தவேண்டும்.

இரவு 7 மணி முதல் பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுவதால் பல பகுதிகளில் இருந்து வரும் பூத்தட்டுகள் ஜவஹர் பஜார் வழியாக சென்று கோவிலை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்தட்டுக்கும் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். மின் கம்பிகள் உள்ள இடங்களில் கவனமுடன் செல்ல வேண்டும். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவதுடன், ரதத்திற்கு பின்னால் வரும் ஜெனரேட்டர் உள்ள வாகனத்தில் ஆட்கள் அமர்வதை தடுக்க வேண்டும். இரவு 2 மணிக்குள் அனைத்து பூத்தட்டுகளும் வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!