தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.
இன்று மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மாரியம்மன் சுவாமி வேப்பமர அலங்காரத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமி மேல தாளங்கள் முழங்க
முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தனர்.
ஆலயம் குடிபுகுந்த மாரியம்மன் சாமிக்கும், மாவடி ராமசுவாமி சாமிக்கும் ஆலயத்தின் பூசாரி தீபாராதனை காட்டினார்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் ஐயாசி மாத திருவீதி உலா சிறப்பு நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.