கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கூட்டம், உணவுக் கடைகள் அமைந்துள்ளது இந்த வழியாக நாள் ஒன்றுக்கு கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணபுரம் நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் நடுவே பாதாள சாக்கடை ஓரத்தில் திடீரென சுமார் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் சார்பில் பேரிக்காடுகள் வைத்திருந்தாலும் மேலும் பள்ளம் அதிகரிக்க கூடும் என்பதால் உடனடியாக அரசு அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம் பள்ளம் குறித்து ஆய்வு செய்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அப்பகுதியில் ஆங்காங்கே குழிகள் அதிகளவு இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
மேலும் கரூர் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் மிகப்பெரிய பள்ளம் அடிக்கடி ஏற்பட்டு அதனை சரி செய்து வந்த நிலையில் தற்போது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் திடீர் பள்ளத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.