Skip to content

பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். மேலும் 2 அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் ரஜோரியில் குண்டுவெடிப்புகளால் வீடுகள் சேதமடைந்தன.  அதிகாரி ராஜ்குமார் தாப்பா வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது வீட்டில் இருந்த அதிகாரி பலியானார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி  இன்று  காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். இந்த தாக்குதல் குறித்து  உமர் அப்துல்லா கூறும்போது,  அதிகாரி ராஜ்குமார்,  ஆன் லைன் மூலம் தன்னிடம்  உரையாடினார். அதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

இதற்கிடையே   பஞ்சாபில் பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரை குறிவைத்து  பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று பாகிஸ்தான், அமிர்தசரசை தாக்க அனுப்பிய  டி்ரோன்களை இந்திய  படைகள் சுட்டு வீழ்த்தின.  இதுபோல குஜராத்தை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கனும்  இந்திய படைகளால் அழிக்கப்பட்டன.

error: Content is protected !!