Skip to content

தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அக்கரைவயல் பகுதியில் பிரசித்தி பெற்ற கதிராளம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் பெருந்திருவிழாவை முன்னிட்டு சென்ற எட்டாம் தேதி திருவிழா தொடங்கி தினந்தோறும் மண்டகப்படி வாரியாக பூத்தட்டு எடுத்தல் காவடிகள் போன்றவை நடைபெற்றது பின்னர் இன்று தேர்தூக்கும் திருவிழா துவங்கியது இந்த தேர் 20 டன் எடை கொண்டது இந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை எட்டு மணிக்கு தூக்குதேரை பக்தர்கள் தூக்கினர் மாலை ஆறு மணி அளவில்

திருக்கோவில் வந்தடைந்தது இந்தத் தேர்திருவிழாவை பார்ப்பதற்கு பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் இவ்விழா ஏற்பாடுகளை சேண்டாகோட்டை மாளியக்காடு காசாங் காடு அக்கரவயல் கிராம மக்கள் மற்றும் திருவிழாக் கமிட்டியாளர்கள் செய்தனர்

error: Content is protected !!