ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்த தி கேர்ள்பிரண்ட் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டாவும், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்தவிழாவில் அவர் பேசியதாவது… பல பெண்களுக்கு தேவையான தைரியம் அளிக்கும் படத்தில் நடித்து, நீ இங்கு நிற்பதைப் பார்க்க எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது ராஷி. இந்தப்படத்தின் போதே நீ, பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்தாய். இது வெறுமனே சினிமா மட்டுமே கிடையாது, இது நோக்கத்திற்காக நடந்துள்ளது.
நான் இந்த படத்தை பார்த்தேன். படம் என்னை உணர்ச்சி மிகுதியாக்கியது. பல இடங்களில் கண்ணீர் வந்தது, முக்கியமான சில இடங்களில் இதயம் கனமாக இருந்தது. சில நேரங்களில் என்னால் சரியாக உட்காரவும் முடியவில்லை. நடக்கும்போதும் என்னால் சரியாக இருக்க முடியவில்லை. சமீபத்தில் பார்த்ததிலேயே மிக சிறந்த படம் இதுதான்.. தன்னுடைய பிரைம் நேரத்தில் இந்தமாதிரி கதைகளில் நடிப்பது மிகவும் பாராட்டக்கூடியது. அவரது பயணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார். இந்தவிழாவில் நடிகை ராஷ்மிகாவின் கையில் விஜய் தேவர்கொண்டா முத்தம் கொடுத்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

