தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், பொதுத்துறை சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நல இயக்குநர் வ. கலைஅரசி முன்னாள் படைவீரர் நல கூடுதல் இயக்குநர் மேஜர் வி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.