Skip to content

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

பிரபு மற்றும் அவரது மனைவி குழந்தைகள்
தியா ( 10 ) ரிதன் (3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் ( 61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஐந்து மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர்.

நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுவிட்டனர்.

அப்போது, திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபுவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!