கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி நாயுடு மேம்பாலம் 10.1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இன்று பிற்பகல் அந்த மேம்பாலத்தில் கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது.
அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக அதில் இருந்த ஒரு சக்கரம் கலந்து தனியாக உருண்டோடியது.
வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை சாமர்த்தியமாக கட்டுப்படுத்தி பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார்.
மேலும் வாகனத்தில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சக்கரம் கலன்ற வேகத்தில் அது பாலத்தின் சரிவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தனியாக உருண்டு சென்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் செய்தி சேகரித்து விட்டு சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆயூப் என்பவர் லாபகமாக அந்த டயரை பிடித்தார், பின்னர் அதனை அந்த வாகனத்தின் ஓட்டுனரிடம் ஒப்படைத்தார்.
உரிய நேரத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் இந்த செயலை கண்ட அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

