கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடி செலவில் 44 இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல தெரிவித்து உள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூபாய் 1,790 கோடியில் ஜி.டி நாயுடு மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேம்பாலம் திறக்கப்பட்டதும் சில நாட்களிலேயே அதிவேகமாக சென்ற ஒரு கார் கோல்ட்வின்ஸ் பகுதியில் இறங்கு தளத்தில் இருந்து சாலையில் செல்லும் போது லாரி மீது மோது மூன்று பேர் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள், வேகத்தடுப்பு அமைப்புகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையொட்டி மேம்பாலத்தில் வேகத்தடுப்புகள், வழிகாட்டி தகவல் பல வகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மேம்பாலத்தில் இரவில் பதிவு செய்யக் கூடிய ஏ.ஐ தொழில்நுட்ப வசதி உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மேம்பாலத்தில் பல்வேறு இடங்களில் 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஏ ஐ தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கேமரா அதிவேகமாக செல்லும் வாகனங்களை இரவிலும் பதிவு செய்யும் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கும் தகவல் அனுப்பும் வகையில் இந்த கேமராக்கள் செயல்படும் மேலும் போக்குவரத்து விதிமுறைகள் மீறிய வாகனங்களின் அபராதம் விதிக்கப்பட விவரங்கள் இடம்பெறும், டிஜிட்டல் டி.வி திரைகளும் 17 இடங்களில் வைக்கப்படும், அனைத்து பணிகளும் ரூபாய் 3 கோடி செலவில் செய்யப்படும், இதற்கான ஒப்பந்தப் பணிகள் ஒரு சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். இதன் மூலம் மேம்பாலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவலாக தெரிவித்துள்ளனர்.

