Skip to content

ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் ஆஷிகா என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று திடீரென்று மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் சண்முகவேல், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போலி பெண் மருத்துவர் கைது
அப்போது அந்த மருத்துவமனையில் இளங்கலை ஆயூர்வேதம் படித்த பெண் மருத்துவர் சௌதா (40) நோயாளிக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் மருத்துவர் சௌதாவை அதிகாரிகள் விசாரனைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முன்னதாக ஆயூர்வேத மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவர் சௌதா மீது வேப்பனஹள்ளி வட்டார மருத்துவர் சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வட்டார மருத்துவர் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!