டைரக்டர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, இவர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா நடித்துள்ளார் .இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசிய பேச்சு கூட வைரலானது .இவர் நடித்த இந்த படத்தின் ட்ரைலர் 24 மணி நேரத்திற்குள் புதிய சாதனை படைத்துள்ளது . நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார் .இவர் நடித்த குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளி வருகிறது .சமீபத்தில் குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்சசி ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலியும் கலந்து கொண்டு படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் .இந்த ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் புதிய சாதனையையே படைத்துள்ளது .அந்த சாதனை என்னவெனில் 24 மணி நேரத்திற்குள் 1கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது .இந்த குபேரா ட்ரைலரை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .இந்தப்படத்தில் ஓடிடி பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .இம்மாதம் 20ம் தேதி வெளியாகும் இப்படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் .
ஒரு கோடியை கடந்த ”குபேரா” …24 மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த டிரைலர்
- by Authour
