கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு நண்பர்களுடன் பூத்தொட்டுகளுக்கு முன்பாக நடனமாடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நடனமாடிய சிலர் அவர் மீது விழுந்து தாக்கி அவரை கத்தியால் குத்தியதில் சியாமி சுந்தர் இறந்தார். இது தொடர்பாக கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சியாம் சுந்தர் பிளஸ்2 தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் கொலை செய்யப்பட்ட சியாம் சுந்தர் 351 மார்க் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளார்.