திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது.
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜ விநாயகர், ராஜ யோக விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், வைஷ்ணவி, பிராம்மி, துர்க்கை, நகர், நவகிரகம் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளது.
இந்த கோவில் அப்பகுதி மக்கள் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு கருமண்டபம்சபதி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர்கலர்
வண்ண பூச்சிகள் பூசிமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தயார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னைசிவகாம பிரதிஷ்ட ரத்தினம்சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையிலான புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத இன்று காலை மிகவும் விமர்சையாக கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக கடந்த ஒன்றாம் தேதி அணுக்கை, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை கணபதிஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது பின்னர் கும்பாபிஷேக விழாவிற்கு புனித நீர் எடுத்துவரப்பட்டது.
இரண்டாம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் மூன்றாம் தேதி இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் காலம் யாகசாலை பூஜைகளும் நடந்தது நான்காம் தேதி என இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பதிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது. 10:30 மணி அளவில் மகா ஆரத்தியும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் நவல்பட்டு சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.