தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மழவேனிற்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி கோவிலில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர். ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ நாகராஜன் ஸ்ரீ காமாட்சி அம்மன் வீரனார் பெரியாச்சி மின்னடியான் மாடன் காட்டேரி அம்மன் தூண்டிக்காரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இன்று ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜை துவங்கி தீப ஆராதனை நடைபெற்று கெடம் புறப்பாடு நிகழ்ச்சி மேளதளங்களுடன் நடைபெற்றது ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் ஸ்ரீ காத்தவராயன் ஆலய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள கோபுர கலசத்திற்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர் ஆலயத்தில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது
பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- by Authour
