கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில்.
12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புணரமைக்க

ப்பட்டு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
தீயணைப்பு நிலைய விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது.
இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது. இன்று 108 மூலிகைகளைக் கொண்டு நான்காம் கால வேள்வி நடைபெற்றது. வேள்விகளை பல்லடம் புத்தரைச்சல் சிவநெறி செல்வர் சிவதிரு சு ஆறுமுகசாமி தலைமையிலான குழுவினர் செய்தனர். இதையடுத்து

புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், சிவன், பரஞ்சோதி மாரியம்மன் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கும்பாபிசேக நிகழ்வில் பங்கேற்ற பக்த்தர்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கவுண்டம்பாளையம் பிரிவு ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

