தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஒன்றாம் தேதி விக்னேஸ்வரர் பூஜை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.
2ம் தேதி முதல் கால யாக பூஜை கள் நடைபெற்று மகாதீபாரதனை நடைபெற்றது மூன்றாம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள் விமான கலச ஸ்தாபனம் எந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது மூன்றாம் தேதி மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது நான்காம் தேதி ஆன இன்று வியாழக்கிழமை நான்காம் கால யாக பூஜை நடைபெற்று மகா தீப ஆராதனை நடைபெற்றது பின்னர் திரு கெடங்கள் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்