திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் இன்று அருணாச்சலம் மன்றத்தில் நடந்த விழாவில் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பதவி ஏற்றுக்கொண்டார்.நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.முன்னதாக மீண்டும் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட எல். ரெக்ஸ் திருச்சி சேவா சங்கம் பள்ளி அருகில் உள்ள நேரு சிலை மத்திய பஸ் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் சத்திரம் பஸ்லயங்களில் உள்ள காமராஜர் சிலை ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை மற்றும் அடைக்கல ராஜ சிலை காந்திஜி சிலை சிவாஜி கணேசன் சிலை சிங்கார தோப்பு பகுதியில் உள்ள தியாகி அருணாச்சலம் சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார் அதன் பின்னர் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி பதவியை ஏற்றுக்கொண்டார்.
தெற்கு மாவட்ட தலைவர் கே ஆர் ஆர் ராஜலிங்கம், மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், வல்லபாய் பட்டேல் கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல்,
ஐடி பிரிவு லோகேஷ், அமைப்புசாரா பிரிவு தலைவர் மகேந்திரன், ஜெயம் கோபி தர்மேஷ் பகதூர்ஷா
அழகர் எட்வின் மலர் வெங்கடேஷ் சம்சுதீன் அணித்தலைவர்கள் கலைப்பிரிவு அருள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன்,மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம்,இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், தொழிலதிபர் விச்சு, தகவல் தொழில்நுட்ப பிரிவு கிளமெண்ட், எஸ்.சி பிரிவு கலியபெருமாள், இலக்கிய பிரிவு பத்மநாபன் ஆராய்ச்சி பிரிவு பாண்டியன் மகிளா காங்கிரஸ் சீலாசலஸ் அஞ்சு, இந்திரா தோழி மாரீஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் பேசும் போது, உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. மாவட்ட கமிட்டி கோட்ட கமிட்டி மற்றும் வார்டு கமிட்டி களுக்கு விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

