கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வெண்ணய்மலை பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்த இடங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறையினர் போலீசார் பாதுக்காப்புடன் காதப்பாறை மற்றும் ஆத்தூர் கிராமங்களில் அறிவிப்பு

பலகைகள் வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையில் மேற்படி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ளவர்கள் வரும் 24.10.2025 மாலை 5.00 மணிக்குள். திருக்கோயிலுக்கு வாடகை செலுத்த சம்மதம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு திருக்கோயில் மூலம் சட்ட விதிகளின் படி நியாய வாடகை நிர்ணயம் செய்து தரப்படும். மேற்படி நபர்களுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டிருத்தும், வாடகை செலுத்த முன் வராத நிலையில் இறுதி வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது.
தவறும் பட்சத்தில் மேற்படி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ளவர்கள் மீது சட்டப்படி துறை ரீதியாக
நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் இறுதியாக அறிவித்துக் கொள்ளப்படுகிறது என உள்ளது.

