வயநாடு உள்ளிட்ட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு கடந்த ஆண்டே இஸ்ரோவின் ‘தேசிய தொலைநிலை உணர்தல் மையம்’ எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தின் கோவை, குமரி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட மலைப்பகுதிகளில் பல இடங்கள் நிலச்சரிவு அபாயம் மிக்கவை என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்கள் நிலச்சரிவு ஆபத்து சற்று குறைவாக உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவால் அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நிலச்சரிவு அபாயம் மிக்க 147 மாவட்டங்களில் கோவை மாவட்டம் 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் உள்ளது.