கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சகர் ஞான பாலமுருகன் தலைமையில் இரண்டு பகுதியில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், சத்தியமூர்த்தி என்பவர் தோட்டத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆட்டுக்கடாவை அடித்து சாப்பிட்டது இதனை அடுத்து வனத்துறையினர் தோட்டத்து பகுதியில் ஏழு கேமராக்கள் மற்றும் விவசாய தோட்டத்தில் நான்கு கேமராக்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் என 11 கேமாரக்கள் வைத்து கண்காணிக்கப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இறந்த கிடா ஆட்டை வைத்தும் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினர் வைத்த கூண்டு பக்கம் வந்தும் வேறு பகுதியில் நடமாட்டம் தொடர்ந்து நடமாடி வருகிறது மேலும் கூண்டில் இரவு பொழுதில் இரண்டு ஆடுகளை வைத்தும் கூண்டுக்கு வராமல் வேறு பகுதியில் சுற்றி தொடர்ந்து மாட்டின் தொடை மற்றும் மீன்கள் வைத்து 11 வது நாளாக காத்திருந்து வருகின்றனர் இந்நிலையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது சிறுத்தை இதனால் தொடர்ந்து விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர் சிறுத்தை சிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் பொள்ளாச்சி வனச்சரகர் ஞான பாலமுருகன் கூறுகையில் சிறுத்தை பிடிக்க வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிறுத்தை அருகில் வந்து 50 மீட்டர் தூரத்தில் செல்கிறது இதனால் சிறுத்தை பிடிக்க கூண்டு மாற்றி வைக்க வனத்துறை அதிகாரியிடம் கேட்கப்பட்டுள்ளது தற்போது சிறுத்தை தேவனூர் கரடு பகுதியில் இருந்து பெருமாள் சுவாமி கரடு வரை மாலை 7 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் கடந்து செல்வது கேமராவில் பதிவாகி உள்ளது விவசாயிகள் நலன் கருதி இன்னும் ஓரிரு நாட்களில் சிறுத்தை பிடிபடும் என தெரிவித்தார் .

