Skip to content

துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி அன்பர்களே 2026 எப்படி இருக்கும்..?..

துலாம் ராசிகார்கள்: 2026: சீர்திருத்தச் சிந்தனையும், தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியமும் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு பலிக்கும். விஐபிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். மகளின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். யாரிடமும் குடும்ப ரகசியங்களை பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனம் வாங்குவீர்கள். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 10-ம் வீட்டுக்கு செல்வதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாகும். இடமாற்றம் உண்டு. சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் எழாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு லாப வீட்டுக்கு செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். தம்பதிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

1.3.2026 முதல் 25.3.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால், நெஞ்சு எரிச்சல், வாயுக் கோளாறு, செரிமானப் பிரச்சினை வரக்கூடும். வறுத்த, பொரித்த உணவுகளை அறவே ஒதுக்குங்கள். 20.6.2026 முதல் 2.8.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், குடும்பத்தில் கருத்து மோதல் வரும். பண விஷயத்தில் கவனம் தேவை.

இந்த வருடம் முழுவதும் சனிபகவான் 6-ம் வீட்டில் நிற்பதால் அந்நிய நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். இழுபறியான அரசு வேலைகள் முடியும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்கள் தலைமையில் நடக்கும்.

டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் கேது நிற்பதால் வருமானம் உயரும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். 5-ம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

டிச.5-ம் தேதி முதல் கேது 10-ம் வீட்டுக்கு வருவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நவீன இடவசதி உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். ராகு 4-ம் வீட்டுக்கு வருவதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. அடிக்கடி கோபப்படாதீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்கும். கணவர் அன்பாக நடந்து கொள்வார். சின்னச் சின்ன பனிப்போர் வந்து போகத்தான் செய்யும். கவலையை விடுங்கள். கன்னிப் பெண்களுக்கு தடைகள் உடைபடும். முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை கேளுங்கள். கல்யாணம் கூடி வரும். விரும்பிய மணமகன் அமைவார். மாணவ- மாணவிகள் விளையாட்டை குறைத்து படிப்பில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம். வகுப்பாசிரியரின் ஆதரவு உண்டு.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் எளிதில் வசூலாகும். ஜூன் மாதம் முதல் குரு 10-ல் வருவதால் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதுர்யமான பேச்சால் லாபமீட்டுவீர்கள். சிலர் கடை அல்லது குடோனை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் வரும். உணவு, தானிய வகைகள், கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் நல்ல லாபம் பார்ப்பீர்கள். கூட்டுத் தொழிலை தவிர்த்து விடுவது நல்லது. அப்படி செய்வதாக இருந்தால், நல்ல பங்குதாரரைத் தேர்ந்தெடுத்து செயல்படவும்.

உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அவ்வப் போது வாக்குவாதங்கள் வரக்கூடும். வேலைகளை முடிப்பதில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர் களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றல் வரும். கணினி துறையினர், அவ்வப்போது தூக்கத்தை தொலைத்து பணி செய்ய வேண்டி வரும்.

கலைத்துறையினருக்கு பெரிய நிறுவனங்களிட மிருந்து வாய்ப்புகள் தேடி வரும். அதேசமயம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்கு படித்து பார்த்து கையெழுத்திடுவது நல்லது. எச்சரிக்கையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, வரும் வாய்ப்பை தவற விட்டுவிட வேண்டாம். சிலருக்கு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டும்.

மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, திறம்பட செயல்பட்டு இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.

விருச்சிகம் ராசிகாரர்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம். விருச்சிகம் ராசி பலன் விருச்சிக ராசி அன்பர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் சுக்கிர பகவான், சூரியன், புதன், செவ்வாய் என அனைத்து கிரகங்களும் உள்ளன. நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். உடம்பில் இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். சோம்பல் நீங்கும் எப்போதும் சோம்பலாக இருப்பதாக நினைத்த நிலைமைகள் மாறும். மனதில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் தீரும். விடுதலை அடைந்தது போல உணருவீர்கள். ராசிநாதன் உச்சமடைவதால் காதல், இளைமை திரும்பும். காலையில் நேரத்தில் எழுந்திருப்பது, உங்களை நீங்களே சற்று மேம்படுத்திக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.
விபரீத ராஜயோகம் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் மாறும். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். விபரீத ராஜயோகம் கிடைக்கும். சோம்பேறித்தனம் நீங்கும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உழைப்பால் முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலில் உங்களுடைய கவனம் அதிகரிக்கும். புதிய பார்வை ஏற்படும். உழைப்புக்கான ஊதியம், அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். சொத்து வாங்கும் யோகம் கடனை அடைப்பதற்கான எண்ணம் தோன்றும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதன் பகவான் 3 ஆம் இடத்துக்குப் போவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். சொத்துகள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தை மாதம் முதல் சேமிப்பு அதிகரிக்கும், கடனை அடைப்பீர்கள், சொத்து வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

தனுசு ராசிகாரர்கள்: சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த தை மாதம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். ராசியிலேயே செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. தேவையில்லாத கோபம், டென்சன் ஏற்படும். 8 ஆம் இடத்தில் ராசிநாதன் மறைந்திருந்ததால் தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள்.

மன அழுத்தம் தீரும்
ராசிநாதன் 7 ஆம் இடத்திற்கு குரு வருவதால் தேவையில்லாத மன அழுத்தம் எல்லாம் நீங்கும். திருமண யோகம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை தை மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு அற்புதமாக இருக்கும். காதல் மலரக்கூடிய காலகட்டம். செவ்வாய் ராசியில் இருப்பதால் இனம்புரியாத டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத விரக்தி மன நிலை இருக்கும்.

திருமண யோகம்
மனதில் சந்தோஷம் இல்லாத சூழல் காணப்படும். ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் 2 ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள், லாட்டரியில் அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். செல்வம் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்.

அரசு வேலை
யோகாதிபதி தனாதிபதி வீட்டில் உச்சமடைவதால் பண வரவு நன்றாக இருக்கும். மனம் விரும்பக் கூடிய துணை கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற வேண்டும், ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி ஏற்படும். ஆண் குழந்தை பிறப்பதற்கான யோகம் ஏற்படும். அரசு வேலை கிடைக்கும் பிராப்தம் உண்டாகும்.

வழிபாடு
ராசியில் 4 கிரகங்கள் இருப்பதால் சந்திர பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். கடற்கரைகளுக்குச் செல்வது நல்லது. சந்திர பகவானுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்வது நன்மையைத் தரும். குன்றத்தூர் சோமங்களம் சென்று வருவது நல்லது.

மகரம் ராசிகாரர்கள்..

​வரும் 2026-ஆம் ஆண்டு நிகழும் குரு பெயர்ச்சி, உங்களுக்கு வெளிநாட்டில் பணியாற்றும் வாய்ப்பினை கொண்டு வரும். குருவின் நேர்மறையான பார்வை, ஆன்சைட் வாய்ப்பை கொண்டு வருவதோடு – தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காண உதவும் வலுவான (செல்வாக்கு மிக்க நபர்களின்) தொடர்பையும் உண்டாக்கும்.

தொழில் வளர்ச்சி தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள், நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, உள்நாட்டில் விற்பனை செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான பணிகளை இந்த ஆண்டு தொடங்கலாம்.

நண்பர்கள் மற்றும் உங்கள் காதல் துணையின் ஆதரவின் மூலம், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றியும் காணலாம்!
2026-ஆம் ஆண்டில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. காரணம், இந்த ஆண்டு கல்லீரல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம். குறிப்பாக, உடல் எடை குறைப்பு முயற்சியில் இருக்கும் நபர்கள், குடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.

இந்த பிரச்சனைகளை சமாளிக்க ஆரோக்கிய உணவு வழக்கம் அவசியம் ஆகும். அதேப்போன்று, ஆரோக்கிய வாழ்க்கை முறை மற்றும் போதுமான ஓய்வு தேவைப்படும். சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

முடிந்தளவுக்கு வீட்டிற்கு வெளியே உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். திருமணம் முடித்த மகர ராசியினர், தங்கள் உடல் ஆரோக்கியத்துடன் தங்கள் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது!

பணியிடத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்வீர்கள்..
வரும் 2026-ஆம் ஆண்டு உங்கள் ராசியில் சனி பகவான் உண்டாக்கும் தாக்கம், பணியிடத்தில் கடுமையான போட்டியை கொண்டு வரும். பணியிடத்தில் காணப்படும் இந்த போட்டிகள் உண்மையில் உங்கள் வளர்ச்சிக்கு உதவி செய்யும். பணியிடத்தில் காணப்பட்ட குழப்பங்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும். எதிர்பார்த்த மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும்.

வரும் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பான ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். தொழில் வளர்ச்சி தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தொழில் முனைவோர், தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பான முக்கிய முடிவு எடுப்பார்கள், சர்வதேச முதலீடுகளை பெறுவார்கள். வெளிநாட்டில் பணியாற்றி வரும் நபர்களின் ஆதரவு, உங்கள் துறையில் உயர் பதவிகள் காண உதவியாக இருக்கும்.

எச்சரிக்கையாக இருங்கள்!

உங்கள் தொழில் திட்டங்களை செயல்படுத்தும் முன் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வது கூடாது. குறிப்பாக, பணியிட நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்வது கூடாது. நிதி நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அனுபவம் இல்லா தொழிலில் முதலீடு செய்வது கூடாது – அனுபவம் இல்லா நபர்களை கூட்டு சேர்ப்பதும் கூடாது. தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காண, குறுக்கு வழிகளை நாடுவது கூடாது.

மனசாட்சிக்கு விரோதம் இல்லா வகையில் செயல்படுங்கள். உங்கள் திறமைகளை பலனளிக்கா இடத்தில் பயன்படுத்தாதீர்கள் – அதாவது, உங்கள் திறமைகளை வீணடிக்காதீர்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்தும், ஊக்கப்படுத்தும் இடத்தில் பணி செய்யுங்கள்; உங்கள் திறமைகளை வளர்க்கும் பணிகளை எடுத்து தைரியமாக செய்யுங்கள்!

காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

வரும் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிகழும் குரு பெயர்ச்சி, இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டு வரும். காதல் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும். குறிப்பாக, உங்கள் காதல் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு பெறுவீர்கள் – காதல் வாழ்க்கையில் வெற்றி காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

அதாவது, உங்கள் பெற்றோர் அனுமதியுடன் விரைவில் காதல் திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உறவை புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே திருமணம் முடித்த நபர்கள், தங்கள் குழந்தைகளின் வழியே ஒரு நற்செய்தி பெறலாம். தங்கள் குடும்பத்தின் நலன் காக்கும் முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் – ஒழுக்கத்தின் பலனாய் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.

கும்பம் ராசிகாரர்கள்:

வரும் 2026-ஆம் ஆண்டு நீங்கள் பிரமித்துப் போகும் அளவுக்கு சம்பவங்கள் பல உங்கள் வாழ்க்கையில் நடக்கும். குரு பகவானின் பெயர்ச்சி, உங்கள் தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரும். நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும், வெற்றியாக மாறும்.

தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் படிக்கற்களாக மாறும்; கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் சரியான பயன்பாட்டின் மூலம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றிகளை கொண்டு வரும். முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். சுருக்கமாக கூறினால் வரும் 2026-ஆம் ஆண்டு உங்கள் வலிமை முழுவதுமாக உணரும் ஒரு காலமாக இருக்கும்.

தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?கும்ப ராசி கொண்டவர்களின் தொழில் வாழ்க்கை குறித்து பேசுகையில், வரும் 2026-ஆம் ஆண்டு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரத்தையும் – கடின உழைப்புக்கு உரிய வெற்றிகளையும் கொண்டு வரும் ஒரு காலமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். உங்கள் கனவுப் பணிகளை செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் – உங்கள் விருப்பமான புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பணி வாழ்க்கையில் காணப்பட்ட பதற்றத்துக்கு தீர்வு காணும் வாய்ப்பு கிடைக்கும் – உங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வரும் 2026-ஆம் நடு பகுதியில் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்!

நிதி நிலை எப்படி இருக்கும்?
கும்ப ராசி கொண்டவர்களின் பொருளாதார நிலை மற்றும் வருமானத்தை குறித்து பேசுகையில், ஆண்டின் முதல் பகுதியில் நிதி நெருக்கடி காணப்படும். இரண்டாம் பாதியில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பும் கிடைக்கும். வரும் 2026-ஆம் ஆண்டு உங்கள் நிதி மேலாண்மைக்கு சவால் விடும் ஒரு ஆண்டாக இருக்கும்.

பங்குச்சந்தையில் ஆர்வம் கொண்டவர்கள், தங்களின் ஆளுமை மிக்க முடிவுகள் மூலம், எதிர்பார்த்த நற்பலன்களை காண்பார்கள். அதாவது, முன்னர் செய்த முதலீடுகள் வழியே போதுமான வருமானம், லாபத்தை காண்பார்கள். வரும் காலத்தில் செய்யும் முதலீடுகள் வழியாகவும் போதுமான வருமானத்தை காண்பார்கள்.

தொழில் வாழ்க்கையில் செய்யும் முதலீடுகள், உங்கள் சேமிப்பை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக சிந்தித்து செயல்பட, உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும்!

​கும்ப ராசியில் பிறந்தவர்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். குருவின் ஆதரவுடன் வரும் ஆண்டின் முதல் பாதி உங்கள் உடல் நல பிரச்சனைகள் தீர்வு காணும்; உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் காணப்படும் மாற்றம் உங்கள் மன ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கும். வரும் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் – ராகுவின் தாக்கம் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

மன உளைச்சல் உண்டாக்கும் சம்பவங்கள் நடக்கும். இருப்பினும் இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு குறுகிய காலத்திற்கே நீடிக்கும். எனவே, நம்பிக்கையுடன் இருங்கள் – ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள். மது, மாது, புகையிலை பழக்கம் கொண்டவர்கள் குறித்த இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது மிக மிக அவசியம் ஆகும்.

கும்ப ராசி கொண்டவர்களின் காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் நிறைந்திருக்கும். ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் ஈகோ சண்டைகள், வாக்குவாதங்கள் என சலிப்புடன் காணப்படும் நிலையிலும் – பின்னர் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். காதல் உறவில் காணப்பட்ட மனஸ்தாபங்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

மகிழ்ச்சியான தருணங்களை உண்டாக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடித்தவர்கள், உறவுக்கு நேர்மையாக இருப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மீட்டு கொண்டு வர முடியும். நடைமுறை வாழ்வுக்கு பொருந்தும் எளிமையான விஷயங்களை குறித்து சிந்தியுங்கள்.

உங்கள் வாழ்க்கை துணையை மகிழ்க்க பெரிய திட்டங்கள் வேண்டாம், எளிய பரிசுகளை அளித்தால் போதுமானது. உறவை பலப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எதிர்பார்த்த மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும்.

கும்ப ராசியினருக்கு வரும் 2026-ஆம் ஆண்டு மாற்றத்திற்கான ஒரு ஆண்டாக இருக்கும். குழப்பங்கள் நிறைந்திருக்கும், சவால்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

இருப்பினும், பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்க கூடிய அளவில் இருக்கும். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் எளிதில் தீர்வு கண்டு, மகிழ்ச்சியை மீட்டு கொண்டு வருவீர்கள்.

வரும் ஆண்டின் நட்சத்திர மாற்றங்கள் உங்களுக்கு சாதகமான விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். குரு பகவானின் செல்வாக்கு உங்களை வழிநடத்த எதிர்பார்த்த திருப்பங்களை காணலாம். எனவே, நம்பிக்கையுடன் போராடுங்கள் – வாழ்க்கையில் வெற்றி காணுங்கள்!.

மீனம் ராசிகாரர்கள்:

மீன ராசியில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை குறித்து பேசுகையில், உறவில் ஆழமான நெருக்கத்தை கொண்டு வரும் ஒரு காலமாக இது இருக்கும். உங்கள் காதலை திருமணம் எனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

காதல் துணை இன்றி சிங்கிளாக இருக்கும் மீன ராசியினர், வரும் 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் தனது குணத்திற்கு பொருத்தமான வாழ்க்கை துணையை கண்டறியும் வாய்ப்பு பெறுவார்கள். மேலும், செப்டம்பர் 2026-க்குள் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது. உறவுக்குள் காதல் செய்து வரும் நபர்கள், தங்கள் பெற்றோர் அனுமதியை பெற முயற்சி செய்வார்கள் – அதற்காக உடன் பிறந்தவர்களின் உதவியையும் நாடுவார்கள்.

காதல் உறவில் பிரச்சனைகள் ஏதும் உண்டாகாமல் இருக்க, கடந்த காலத்துடன் தொடர்புடைய விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் 2026-ஆம் ஆண்டு மகிழ்ச்சியான தருணங்களை கொண்டு வரும் ஒரு ஆண்டாக இருக்கும். குறிப்பாக, பெற்றோர் எதிர்பை மீறி திருமணம் செய்த ஜோடிகள் தங்கள் திருமண உறவில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு காணும் ஒரு தினமாகவும் இன்று இருக்கும்.

திருமணம் முடித்த மீன ராசி ஆண்களுக்கு அலுவலகத்தில் மேலும் ஒரு காதல் வாய்ப்பு கிடைக்கலாம். முடிந்தளவுக்கு இந்த உறவை தவிர்ப்பது நல்லது. திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பது, தற்போது மகிழ்ச்சியாக செல்லும் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். சிறு குழுந்தைகளின் பெற்றோராக இருக்கும் மீன ராசியினர், தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

அவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதும் அவசியம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

மீன ராசியினருக்கு வரும் 2026-ஆம் ஆண்டு தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரும் ஒரு ஆண்டாக இருக்கும். குறிப்பாக, படித்து முடித்து புதிய பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். பணியை மாற்ற விரும்பும் நபர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்கள் ஏப்ரல் 2026-க்குள் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். தொழில்முறை வாழ்க்கைக்கு தேவையான தனித்திறமைகள் மற்றும் புரிதலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

முதல் பாதியில் எண்ணற்ற சவால்களுடன் செல்லும் உங்கள் தொழில் வாழ்க்கை, அக்டோபர் மாதத்திற்கு பின்னர் சீராக மாறும். தடைகள் அனைத்தையும் படிகற்களாக மாற்றி அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லும் வாய்ப்புகள் காணப்படுகிறது.

பொருளாதார நிலை குறித்து பேசுகையில், உங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம். தேவையற்ற செலவுகளை தவிர்த்திடுங்கள், திடீர் பயணங்களை தவிர்த்திடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம், எதிர்வரும் மருத்துவ செலவுகளை நீங்கள் தவிர்க்கலாம்.

வணிகம், வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டவர்கள் திடீர் வருமானத்தை காணும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த ஆண்டு கிடைக்கும் ஊதிய உயர்வு மற்றும் போனஸ், அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பினை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். நிலம் சார்ந்த முதலீடுகள் உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவி செய்யும்.

ஏற்கனவே செய்து வரும் தொழில் வழியே கிடைக்கும் வருமானத்தை, சரியான வழியில் முதலீடு செய்ய – எதிர்பார்த்த வருமானத்தை கொண்டு வரலாம். கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம், உங்கள் குடும்ப உறவினர்களின் அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்!

குரு பெயர்ச்சி : வரும் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழும் குரு பெயர்ச்சி, மீன ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 4-வது மற்றும் 5-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாற்றமானது, அவர்களின் காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரும். உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்!

சனி பெயர்ச்சி : வரும் 2026-ஆம் ஆண்டு உங்கள் ராசியின் வழியே சஞ்சாரம் செய்யும் சனி, தொழில் வாழ்க்கையில் வாக்குவாதங்கள் மற்றும் சவால்களை கொண்டு வருகிறார். இருப்பினும், தெளிவான சிந்தனைகள் மற்றும் தீர்க்கமான முடிவுகள் மூலம் இந்த பிரச்சனைகளை சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி காண்பீர்கள்.

ராகு பெயர்ச்சி : ராகு உங்கள் ஜாதகத்தில் 12-ஆம் வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார். இந்த மாற்றம் ஆனது, பயணங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சி தொடர்பாக எண்ணற்ற பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், இந்த பயணங்கள் அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும்!

error: Content is protected !!