காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய்(6), கார்னிகா(4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன. அபிராமி டிக்டாக் வெளியிட்டு அந்த பகுதியில் பிரபலமானவர்.
இந்நிலையில் அபிராமிக்கு பிரியாணி கடையில் வேலை பார்த்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தனர். கணவன் இல்லாத நேரத்தில் மீனாட்சி சுந்தரம் அபிராமி வீட்டுக்கே வந்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இந்த விவகாரம், அக்கம் பக்கத்தினர் மூலம் கணவர் விஜய்க்கு தெரியவந்தது. மனைவியை கண்டித்தார். ஆனால் அவரது கள்ளக்காதல் எந்த கண்டிப்பையும் கேட்காத அளவுக்கு வெகுதூரம் போய்விட்டது.
எத்தனை நாள் தான் இந்த கணவனுக்கு பயந்து இப்படி திருட்டு உறவு கொள்வது, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என திட்டம் தயாரித்த அபிராமி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும், கணவன் மற்றும் 2 குழந்தைகளையும் தீர்த்து கட்ட சதி திட்டம் போட்டனர். 3 பேரையும் தீர்த்து கட்டிவிட்டு கேரளாவுக்கு சென்று இஷ்டம் போல வாழ திட்டமிட்டனர்.
இதற்காக கடந்த 2018ம் ஆண்டு இரவு அபிராமி, தனது கணவர், 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். இதை குடித்த 2 குழந்தைகளும் இறந்தன.ஆனால் கணவர் தப்பி விட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமி, பிரியாணி கடை மீனாட்சி சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு அப்போது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வழக்கு காஞ்சிபுரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பளித்தார். அதில் அபிராமி பெண் என்பதால் தூக்கு தண்டனை விதிக்க முடியாது. அதே நேரத்தில் அவருக்கு வெறும் ஆயுள் தண்டனை போதாது. எனவே சாகும்வரை அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
அதுபோல கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மீ