புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகின்ற மார்ச் 9ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் அரசு பொது தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் உள்ளூர் விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

