Skip to content

லாரி அலுவலக ஊழியரை தாக்கி பணம் கொள்ளை…. 3 பேர் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி பாலக்கரை உதயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் அவர் காந்தி மார்க்கெட் சப்-ஜெயில் சாலையில் ஒருலாரி செட் அருகே நடந்து சென்றபோது 3 நபர்கள் அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த வசூல் பணமான 6 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்று மாயமாயினர். இது குறித்து விஸ்வநாதன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில்

ஆய்வாளர் சிவராமனிடம் அளித்தார். புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 நபர்களை தேடி வருகின்றனர்.இது தொடர்பான சி.சி.வி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!