Skip to content

அரிசி லோடு ஏற்றி வந்த லாரியின் சக்கரம் சிக்கி விபத்து..

  • by Authour

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ஏற்றி வந்த லாரி கோவை சிரியன் சர்ச் சாலையில் ஓரமாக பிளாட்பாரத்தில் நிறுத்த முயன்ற போது லாரி சக்கரம் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது லாரி சாலையோரம் சாய்ந்து அருகில் இருக்கும் காம்பவுண்டு சுவர் பிடியில் நின்று கொண்டிருக்கிறது
சம்பவ இடத்தில் கோவை ஆர்.எஸ் புரம் போலீசார் லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மற்றொரு லாரியை வரவழைத்து விபத்து ஏற்பட்ட லாரியில் இருந்து அரிசிகளை மாற்றிய பின்னரே கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!