செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேந்திரன்(28). சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பிரியங்கா(25) சாப்ட்வேர் இன்ஜினீயர், சென்னையில் பணியாற்றி வந்தார்.
சுரேந்திரனின் தாயாரும், பிரியங்காவின் தாயாரும் அக்கா, தங்கை. எனவே சுரேந்திரனுக்கு, பிரியங்கா தங்கை முறை. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அண்ணன், தங்கை தானே என ஊரார் நினைத்துக்கொண்டனர். ஆனால் அவர்களுக்கான பழக்கம் விபரீதமாக இருந்தது.
அடிக்கடி வெளியூர் சென்று வந்தனர். இதில் பிரியங்கா கர்ப்பமானார். இதுபற்றி சில மாதங்கள் யாரிடமும் சொல்லவில்லை. வயிறு பெரிதாக இருந்தால் பெற்றோர் விசாரித்தபோது கர்ப்பம் தெரியவந்தது. கர்ப்பத்துக்கு காரணம் அண்ணன் சுரேந்திரன்.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல என இருவீட்டாரும் தலையில் அடித்துக்கொண்டனர். ஊராருக்கு தெரியும் முன் கர்ப்பத்தை கலைத்து விடலாம் என சில ஏற்பாடுகளை செய்தனர். அதற்குள் மாதம் 8 ஆகி விட்டது. கருகலைப்பு செய்தால் பிரியங்கா உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.
இதனால் இருவீட்டிலும் இந்த முறை தவறிய காதல் ஜோடிக்கு ஏச்சு பேச்சு கிடைத்தது. இதற்கு என்ன தீர்வு என இருவரும் யோசித்தனர். நேற்று இரவு காதல்ஜோடி இருவரும் தண்டலம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பம்ப்ஷெட் அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தண்டலம் போலீசார் விசாரணை நடத்தினர்.