ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியார் கவியருவி இயற்கை எழில் சூழ்ந்த இடமாக விளங்குவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மலைப்பொழிவு இல்லாமல் வறச்சி நிலவி வருகிறது இருந்தபோதிலும் ஆழியார் கவியருவியில் நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருந்தது இதனால் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்று வந்தனர் . இந்த நிலையில் தற்பொழுது நீர்வரத்து குறைந்து பாறை மட்டும் தெரிவதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவியில் உடைந்து காணப்படும் தடுப்பு மரக்கட்டைகளை அகற்றிவிட்டு புதியதாக கம்பி தடுப்புகள் போடப்படும் மழை பொழிவு பொழிந்து நீர் வரத்து வந்தவுடன் சுற்றுலா பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

