சென்னை, திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைப்பு. பாகிஸ்தான் எல்லை வரை சென்று சென்னை போலீசார், காரை மீட்டு வந்தனர். 80 நாட்களில் 45 ஆயிரம் கிலோ மீட்டர் வாகனத்தில் மர்மகும்பல் பயணித்துள்ளது. எனவே சமூக விரோத செயல்களுக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ராஜஸ்தான் மாவட்டத்தின் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கார் இருப்பதை அறிந்து சென்றபோது, கடத்தல்காரர்கள் காரை வழியில் விட்டு சென்றனர்.
கடந்த ஜூன் மாதம் சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் சர்வீஸ் சென்டர்களில் இருந்த 3 சொகுசுகார்களை திருடிய வழக்கில் சட்டேந்திரசிங் ஷகாவாட் என்பவர் கடந்த ஜூன் 6 ஆம் தேதி கைதாகியிருந்தார். அவர் திருடிச்சென்ற மூன்று சொகுசு கார்களில் ஒரு கார் ராஜஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அது தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.