“எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது.” என்றார் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சுவாமிநாதன் பாரத தாயின் மகன்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்காவில் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பால் , மற்றும் அரிசி, கோதுமை, சோயா, சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் பிரதமர் மோடி இவ்வாறு பேசி உள்ளார்.