Skip to content

தொடங்கியது மதுரை தவெக மாநாடு , பவுன்சர்கள் புடைசூழ வந்த விஜய் ரேம்ப் வாக்

  • by Authour

மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு இன்று  பிறபகல் 3.15 மணிக்கு  நாதஸ்வர இசையுடன்  தொடங்கியது. அதைத்தொடர்ந்து  கட்சியின்  கொள்கை பரப்பு செயலாளர் மேடைக்கு வந்து மாநாடு தொடங்கியதை அறிவித்தார். மாநாட்டு மேடையில் விஜயின் பெற்றோர்   சந்திரசேகர், ஷோபா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.  விஜயின் திரைப்பட மற்ற  த பாடல் ஒலிபரப்பபட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்ள் ஆரவாரம் செய்தனர்.  விஜய் மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த  கேரவனில் இருந்து அவர் நிகழ்ச்சிகளை  கவனித்து வருகிறார்.  விஜய் எப்போது  வருவார் என்று  எதிர்பார்த்து தொண்டர்கள்  காத்திருக்கிறார்கள்.  அவர் மாநாட்டு திடலில் கொடியேற்றியவுடன்  மற்ற தலைவர்கள்  உரையாற்ற தொடங்குவார்கள்.   தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இறுதியில் விஜய்    நிறைவுரையாற்றுகிறார். சரியாக  3.47 மணிக்கு விஜய் பவுன்சர்கள்  பாதுகாப்புடன்  மாநாட்டு மேடைக்கு வந்தார்.

மேடையில் இருந்த மாவட்ட  செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன்  அவர் கைகுலுக்கினார்.  அப்போது  மேடையில் இருந்த பெற்றோரை பார்த்து கட்டிபிடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.   பின்னர் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து  வணக்கம் தெரிவித்தார்.   மேடையில்  அமைக்கப்பட்டிருந்த  ரேம்ப்பில் ரேம்ப் வாக்  சென்று தொண்டர்களை  சந்தித்தார். அப்போது விஜயை நோக்கி ஓடிவந்த தொண்டர்களை  பவுன்சர்கள் தூக்கி வீசினர். பின்னர் தொண்டர்கள் துண்டுகளை   விஜயை நோக்கி வீசினர். அதன்பின்  யாரும்  ரேம்ப் மேடைக்கு ஓடிவரவில்லை.   தொண்டர்கள் வீசிய துண்டுகளை  விஜய்   கழுத்தில் போட்டுக் கொண்டார். ஒரு துண்டை  தலையில் கட்டிக்கொண்டார். மேடைக்கு திரும்பிய விஜய் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி  வணங்கினார்.  அதைத்தொடர்ந்து உறுதி மொழி வாசிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து  மதுரை மாநாட்டுக்கு வந்த  தொண்டர்  மதுரை  சக்கிமங்கலம் பிரிவு சாலையில்  கழிவறைக்கு சென்றபோது உயிரிழந்தார்.  அவரது பெயர் பிரபாகரன்.

error: Content is protected !!