Skip to content

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி என்ற இடத்தில்  பிரமாண்ட  திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.  மாநாடு இன்று  பிற்பகல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டுக்காக  பந்தல் எதுவும் அமைக்கப்டவில்லை.  அலங்கால மேட, அலங்காலர நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில்  விஜய் , அண்ணா, எம்.ஜி.ஆர் கட்அவுட் வைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவு முதல்  தொண்டர்கள் வரத் தொடங்கினர்.  பெரும்பாலானவர்கள் விஜய் டீ சர்ட் அணிந்து வந்திருந்தனர்.
மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றே விஜய் மதுரை வந்து விட்டார். அவரது பெற்றோரும்  வந்துள்ளனர்.
 மாநாட்டு திடலில் நேற்று  100 அடி உயர கொடிகம்பம் திடீரென சாய்ந்தது.  அதற்க பதிலாக  வேறு ஒரு கொடிகம்பம் சிறிதாக நடப்பட்டு உள்ளது. அந்த கம்பத்தில்  விஜய் கொடியறே்றுகிறார்.
 மாநாட்டுக்கு  பக்கத்து கிராமங்களை சேர்ந்த  மக்கள்  நடந்தே வருகிறார்கள்.  இதனால் மதுரை, தூத்துக்குடி, நெல்லை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  சுங்கசாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

மாநாட்டு பாதுகாப்பு பணிகளில்,  ஐஜி தலைமையில் 3500 போலீசார்  ஈடுபடுகிறார்கள். இது தவிர தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பவுன்சர்கள்  பெண்களை கண்காணிப்பதற்கென 500 பெண் பவுன்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.
மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில்  டாக்டர்கள், நர்சுகள் , உதவியாளர்கள் என 500 பேர்  தயாராக உள்ளனர். 45  ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

முன்வரிசைகளில்  இடம் பிடித்து விட்டால் விஜயை நன்றாக பார்க்கலாம் என    பெரும்பாலானவர்கள்  காலையிலேயே திடலுக்கு வந்து விட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்,  பிஸ்கட் வழங்கப்பட்டது.   மாநாட்டுக்காக பல லாரிகளில் ஸ்நாக்ஸ் கொண்டு வரப்பட்டு  வழங்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்தும் லாரிகளில் ஸ்நாக்ஸ் கொண்டு வரப்பட்டது.   அவற்றை பெற  மக்கள் முண்டியடித்தனர்.

மாநாடு நடைபெறும் பகுதியில்இன்று காலை முதலே  வெயில்   சுட்டெரிக்கத் தொடங்கியது.  இதனால் சில தொண்டர்கள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு  அங்கேயே  சிகிச்சை அளிக்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து டிரோன்கள் மூலம்  மைதானத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மாநாடு நடைபெறும் பகுதிகளில் திடீர்கடைகள் பல முளைத்தன. அங்கு வியாபாரம்  களைகட்டியது. அது போல  வழிநெடுகிலும் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் சரக்கு விற்பனையும்  சூடு பிடித்தது.

error: Content is protected !!