சென்னை தாம்பரம் அடுத்த கண்ணடபாளையம் பகுதியில் உள்ள கல்குட்டையில் 45 ந்து மதிக்க தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யபட்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்று பல்வேறு கோண்ங்களில் விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.