திருவெறும்பூர் அருகே அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி இடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய வனை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகரன் இவரது மகள் மதுவினா (21) இவர் திருவெறும்பூர் பகுதியில் அரசு போட்டி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி வழங்கக்கூடிய தனியார் பயிற்சி மையத்தில் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் இல்லாத செல்போன் அழைப்பு வந்துள்ளது.
அதனை ஆன்செய்து பேசியபோது எதிர் முனையில் பேசிய அறிமுகம் இல்லாத நபர் ஆபாசமாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து.மதுவினா அவரது என்னை பிளாக் செய்த நிலையில் வாட்சப் காலில் வந்து ஆபாசமாக பேசியதோடு ஆபாசமாக பேசி அனுப்பியுள்ளார் மேலும் ஆபாச படங்களையும் அனுப்பி உள்ளார். இப்படி தொடர்ந்து மதுவினாவிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இது சம்பந்தமாக மதுவினா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று வேங்கூர் பகுதியில் மதுவினாவை தேடிக்கொண்டு அந்த நபர் வந்துள்ளான் அப்படி வந்தவன் போலீசாரை கண்டதும் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் பாலத்தில் இருந்து குதித்துள்ளான் அதில் அவனது இடது கால் முறிந்துள்ளது.
பின்னர் அவனை போலீசார் பிடித்து விசாரணை செய்த பொழுது அவன் நாமக்கல் மாவட்டம் தாழையூர் மாங்குடி பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் மகன் சித்தன் (48) என்பது தெரியவந்தது மேலும் அவனிடம் முறையாக போலீசார் விசாரித்த பொழுது தினமும் தனக்கு தோன்றிய செல்போன் எண்ணிற்கு போன் செய்வதாகவும் அப்படி போன் செய்யும்பொழுது எதிர் முனையில் பெண்கள் பேசினால் அந்த பெண்களிடம் ஆபாசமாக பேசுவதோடு அந்தப் பெண்களை உறவுக்கு அழைப்பதாகவும் மேலும் அந்த பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் படங்களை அனுப்புவதாகவும் இது வாடிக்கையாகவே கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அதுபோல்தான் மதுவினாவிற்கும் அவன் அனுப்பியது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு கால் முறிவு ஏற்பட்டதால் சிந்தனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.