வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர்
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அந்தப் பெண்ணை கட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து வீட்டுக்குள் புகுந்திருந்த மர்ம ஆசாமியை பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை பிடித்து விசாரணை செய்த போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (37)என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.
கஞ்சா விற்ற நபர் கைது
ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது மேலே கொண்டையம் பேட்டயை சேர்ந்த ரங்கநாதன் (25) என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காசிப் பாளையம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சந்துரு தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வரகனேரி கல்பாளையத்தை சேர்ந்த காமராஜ் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பாலக்கரை போலீசரகத்துக்கு உட்பட்ட ஆலம் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெல்சி மைதானம் பகுதியை சேர்ந்த ரத்தின சபாபதி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.
2 குழந்தைகளின் தாய் மாயம்
திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் இவரது மனைவி சாந்தா ஷீலா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவரிடம் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கணவர் வீட்டில் விட்டுவிட்டு சாந்த ஷீலா சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் அங்கு இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது சகோதரி நவநீதா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனால் சாந்தா ஷீலாவை தேடி வருகின்றனர்.
கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி எடத்தெரு ரோடு பிள்ளைமா நகரை சேர்ந்தவர் எட்வர்டு அலெக்சாண்டர் (38). இவர் கூலி தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய எட்வர்டு அலெக்ஸாண்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

